1 ஊடகம்
67 வது தேசிய அரச இலக்கிய விருது விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்
2026 ஆம் ஆண்டிற்கான அரச இலக்கிய விருது வழங்கும் விழா, இம்மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கலைக் கழகத்தின் தலைவர் கீர்த்தி வெலிசரக தெரிவித்துள்ளார். இன்று (03) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
