1 ஊடகம்
டிஜிட்டல் தொலைக்காட்சி திட்டத்தின் முன்னேற்றம் குறித்த விசேட கலந்துரையாடல்
இலங்கையின் டிஜிட்டல் தொலைக்காட்சி ஒளிபரப்பு திட்டத்தின் (Digital Television Project) தற்போதைய முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்வதற்கும், எதிர்கால வேலைத்திட்டங்களை திட்டமிடுவதற்குமான விசேட கலந்துரையாடல் ஒன்று 2026 செப்டம்பர் 07 ஆம் திகதி டிஜிட்டல் தொலைக்காட்சி நிலையத்தில் நடைபெற்றது. டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் திரு. எரங்க வீரரத்ன மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன ஆகியோரின் தலைமையில் இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
