1 ஊடகம்
நாட்டின் சில பகுதிகளில் 75mm மழை
சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.நாட்டை அண்மித்துள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
