சவாலுக்கு மத்தியிலும் பொருளாதார ஸ்த்திரம் - இலங்கைக்கு ஐ.நா பாராட்டு
இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். 81 ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடருக்கு இணையாக நியூயோர்க் நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
