P 4447 அதிவேக தாக்குதல் படகில் காணாமல் போன அதிகாரி என சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் மீட்டெடுக்கப்பட்டமை தொடர்பிலான ஊடக அறிக்கை
P 4447 அதிவேகத் தாக்குதல் படகில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, காணாமல் போனதாகப் பதிவான அதிகாரியினுடையது என சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று நேற்று (2026 செப்டம்பர் 04) காலையில் கடற்படை சுழியோடிகளால் அப் படகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்துகிறது.
