1 ஊடகம்
வனஜீவராசிகள் களப்படையை வலுவூட்ட 06 பெண் உத்தியோகத்தர்கள் உட்பட 229 பேருக்கு நியமனங்கள்
வனஜீவராசிகள் திணைக்களத்தின் களப்பணிகளை வலுவூட்டுவதையும் மனித-யானை மோதலைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, தரம் III வனவிலங்கு ஒழுங்குமுறைப்படுத்தும் உத்தியோகத்தர்கள் (Wildlife Regulatory Officers) 229 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு பத்தரமுல்லையில் அமைந்துள்ள சுற்றாடல் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. சுற்றாடல் அமைச்சரின் தலைமையில் மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.
