87 கையடக்கத்தொலைபேசிகளுடன் 03 சீன பிரஜைகள் கைது
சட்டவிரோதமான முறையில் கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் அவற்றுக்கு பயன்படுத்தும் ஒருதொகை மின்கலங்களுடன் 03 சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.34 வயதுடைய பெண் மற்றும் 35 வயதான 02 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி 51,40,000 ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.சந்தேகநபர்களிடமிருந்து 87 கையடக்கத்தொலைபேசிகளும் 140 மின்கலங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கம் தெரிவித்துள்ளது.சீனாவின் ஷங்காய் நகரிலிருந்து சந்தேகநபர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவித்தனர்.
-556321.jpg)