1 ஊடகம்
புவிசார் வளங்கள் அகழ்வு தொடர்பான மாவட்டக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் !
புவிசார் வளங்களான கருங்கல், சரளைக் கல், மண், மணல் மற்றும் களிமண் ஆகியவற்றை அகழ்தல், கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது குறித்த யாழ்ப்பாண மாவட்டக் கண்காணிப்புக் குழுக் கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (09.10.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
