1 ஊடகம்
சிலாவத்துறை–அரிப்பு கரையோரப் பகுதியைப் பாதுகாக்கும் கடற்கரைப் பூங்காத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது
மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை-அரிப்பு பகுதியில் கரையோரத்தைப் பாதுகாத்தல், மீனவ சமூகத்தை வலுவூட்டுதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்படவுள்ள புதிய கடற்கரை ஓய்வுப் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, கௌரவ சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி அவர்களின் தலைமையில் நேற்று (14) பிற்பகல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
