அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான உபகுழு
ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் மற்றும் அதன் காரணமாக சிரேஷ்ட ஆசிரியர்கள் அதிபர் சேவையில் இணைவதற்கு தயக்கம் காட்டுவது தொடர்பில் ஆராய்ந்து, பரிந்துரைகளை முன்வைப்பதற்காக பாராளுமன்ற உபகுழுவொன்றை நியமிக்க கல்வி, தொழிற்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு தீர்மானித்தது. கல்வி, தொழிற்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
