கொலன்னாவ மழைநீர் வடிகாலமைப்பு மற்றும் சுற்றாடல் அபிவிருத்தித் திட்டம்
கொலன்னாவ மழைநீர் வடிகாலமைப்பு மற்றும் சுற்றாடல் மேம்பாட்டுக் கருத்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2019 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருப்பினும், 2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கொறோனா றிலைமை மற்றும் அதன் பின்னல் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கருத்திட்டக் கூறுகள் முற்கூட்டியே திட்டமிட்டவாறு அமுல்படுத்த முடியவில்லை. அதனால், கருத்திட்டத்தின் எஞ்சிய பணிகளுக்கான புதிய திட்டவரைபு மற்றும் அதற்கமைவான செலவு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய திட்ட வரைபுக்கமைய, தற்போது நிருமாணிக்கப்படும் சலலிஹினி மாவத்த கால்வாய் வழியை (3,250 மீற்றர்) நிருமாணித்துப் பூர்த்தி செய்தல் மற்றும் தஹம்வல கால்வாய் வழியை (3,868 மீற்றர்) நிருமாணித்தல், கருத்திட்டத்தின் நீர்த்தடாகங்கள் /நீர் சேரும் இடங்களை அமைத்தல் போன்ற விசேட பணிகளை மேற்கொள்ளல், பஸ்ஸன்ன கால்வாய் வழி (4,475 மீற்றர்) மற்றும் தண்டுகொட்ட கால்வாய் வழி (650 மீற்றர்), தண்டுகொட்ட நீர்க் கட்டுப்பாட்டுக் கதவை அமைத்தல் மற்றும் ஒரு செக்கனுக்கு 01 கனமீற்றர் வீதம் மழைநீரை பம்பி மூலம் இறைப்பதற்கான நகர்த்தக்கூடிய 03 நீர்ப்பம்பிகளை நிறுவுதல், கருத்திட்டத்தை அமுல்படுத்தும் போது கருத்திட்டப் பிரதேசத்தில் அமைந்துள்ள கட்டாயமாக சுவீகரிக்க வேண்டிய காணிகளை கையகப்படுத்தல் மற்றும் அதனால் பாதிக்கப்படுகின்ற குடும்பங்களுக்கு அவர்களின் அன்றாட வாழ்வாதார வழிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் கருத்தில் கொண்டு, நட்டஈடுகளை வழங்குவதற்காக 1,015 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுடன் கூடிய உதவித்தொகைக் கொடுப்பனவு முன்மொழிவை அமுல்படுத்துதல் ஆகிய பிரதான கூறுகளின் கீழ் கருத்திட்டத்தின் இப் பணிகள் 15,077.82 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டு செலவில் 03 ஆண்டு காலப்பகுதியில் அமுல்படுத்துவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
