எதிர்கால அபிவிருத்திக்காக யாழ்ப்பாணத்தில் 187 ஏக்கருக்கும் அதிகமான காணி விடுவிப்பு
யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் அரச சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 187.56 ஏக்கர் காணி, எதிர்கால பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாதுகாப்புப் படையினரால் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறித்த காணியை உற்பத்திப் பொருளாதார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
