முற்றாக உடைந்த நாயாறு பாலம் இலங்கை இராணுவ பொறியாளர்களால் புனரமைப்பு
சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் முற்றாக உடைந்த முல்லைத்தீவு நாயாறு பிரதான பாலத்தை, இலங்கை இராணுவ பொறியாளர்கள் புனரமைத்து, பிரதேசத்தின் அத்தியாவசிய போக்குவரத்து இணைப்பை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளனர்.