1 ஊடகம்
92 ஆவது புனிதர்களின் சமர் மார்ச் 19 இல் ஆரம்பம்
இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, நாட்டின் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் தனது நீண்டகால அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக, கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரி அணிகளுக்கு இடையிலான 92 ஆவது புனிதர்களின் மாபெரும் கிரிக்கெட் சமருக்கு (Battle of the Saints) இம்முறையும் அனுசரணை வழங்குகின்றது. இதன் மூலம் இரு கல்லூரிகளுடனும் டயலொக் கொண்டுள்ள 10 ஆண்டுகால பந்தம் மேலும் வலுவடைகிறது.
