உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்22 ஜூன், 2026

காணாமல் போனோர் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது-  கடற்றொழி்ல் அமைச்சர்

கடந்த காலத்தை மறந்து விடுங்கள் என்று தான் கேட்க விரும்பவில்லை சமாதான கரங்களை பலப்படுத்தும் வகையில் எமது அரசின் செயற்பாடுகள் அமைகிறது என்று நீதி அமைச்சர் தெரிவித்தார்.யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களுடனான கலந்துரையாடல் நேற்று (20.06.2026) மாவட்டச் செயலகத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ ஹர்ஷன நானாயக்கார அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.கெளரவ நீதி அமைச்சர் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மீண்டும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது, தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவது நாட்டின் அபிவிருத்தி போன்ற நடவடிக்கைகள் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்குவது போன்ற அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதுதான் இன்றைய பரம்பரையின் பொறுப்பாக உள்ளது எனவும், அந்தப் பொறுப்பு மிகவும் கடினமானது எனவும் தெரிவித்தார். வட மாகாணம், கிழக்கு மாகாணம், மலையகம் போன்ற அனைத்து பகுதிகளிலும் வடக்கு, தெற்கு என்ற எந்த வேறுபாடும் இன்றி கடினமான பொறுப்பை நிறைவேற்றும்படி எமது அரசாங்கத்திற்கு பொறுப்பை வழங்கியுள்ளதாகவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் எவ்வளவு சொற்பொழிவுகளை ஆற்றினாலும் உரையாடல்களை மேற்கொண்டாலும் அதற்கு ஈடாகாது எனவும், அதற்குப் பதிலாக செயற்பாட்டு ரீதியிலே செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அந்த வகையில் தான் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒருமைப்பாட்டு அலுவலகம் என்பனவும் எமது அமைச்சின் கீழ் இயங்குவதாகவும், அவற்றின் செயற்பாடுகளை முன்னோக்கிக் கொண்டு செல்வதாகவும் யுத்தத்தினால் நடக்க கூடாத சில நிகழ்வுகள் நடந்துள்ளதாகவும் அது தொடர்பாக ஆழ்ந்த கவலைகள் இருப்பதாகவும், ஒருவரையும் கடந்த காலத்தை மறந்து விடுங்கள் என்று கேட்க விரும்பவில்லை எனவும், முன்னோக்கி புதிய வடிவத்திலே சிந்தித்து, புதிய வடிவத்திலே செயற்பட்டு செல்ல வேண்டும் எனவும், வரும் காலத்தில் இவற்றுக்கு தீர்வுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், சமாதானத்தின் கரங்களை நீட்டுவதற்காக தான் கடந்த காலத்தில் மூடப்பட்டிருந்த பாதைகளை திறந்து விட்டிருப்பதாகவும், அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக முன்னெடுத்து வருவதாகவும் இவ்வாறான நடவடிக்கைகள் சமாதான கரங்களை பலப்படுத்தும் வகையிலே தான் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இன்று காணாமல் போன அலுவலகம் தொடர்பாகவும் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீடுகள், அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுடைய வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகவும், இச் செயற்பாடுகள் காரணமாக மக்கள் ஓரளவுக்கு ஏனும் இருந்த நிலையை விட அலுவலகம் தொடர்பாக நம்பிக்கையுடன் செயற்படுகின்றார்கள் என்பதை உணர முடிந்துள்ளதாகவும், காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளின் போது இவ் இடங்களுக்கு வரும் மக்களை அவதானித்தால் அங்கு வரும் மக்களின் நம்பிக்கை அதிகரித்து காணப்படுவதையும் சுட்டிக்காட்ட முடியும் எனவும் தெரிவித்தார். இவ் அலுவலகத்துக்கு தேவையான நிதிகள் அமைச்சரவையின் அனுமதியுடன் 375 மில்லியன் ரூபாய் அலுவலகத்தின் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஒதுக்கியுள்ளதாகவும், இவ் அலுவலகத்தின் உத்தியோகத்தர்களின் 69 வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், மேலதிக நிதி தேவைப்பட்டால் அதனை ஒதுக்குவதற்கு தயாராக உள்ளதாகவும் இப் பிரச்சினையை தொடர்ச்சியாக முன்னெடுத்து கொண்டு போக வேண்டிய சூழ்நிலை இல்லை எனவும், எதிர்வரும் இரண்டு வருட காலத்துக்குள் இப் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவதே எதிர்பார்ப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.விசாரணைகளின் எதிர்பார்ப்பு வேகமாக தரவுகளை எடுத்து எப்படியாவது முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே ஆகும் எனவும், இதன் எதிர்பார்ப்பு விசாரணைகளை நடாத்தி சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டறிந்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதும் இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்காக உதவிகள் செய்வது நியாயமான முறையில் நீதி கிடைக்க வேண்டும் என்றும் அதனை செய்து முடிக்க வேண்டும் என்று தான் எண்ணுவதாகவும், உயிர் மதிக்க முடியாத பெறுமதி வாய்ந்தது, சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டுதான் இறுதிக் கட்டத்திற்குள் செல்லலாம் எனவும், சாட்சியத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் எடுக்க தயாராக உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாழ்வாதாரம், கல்வி கற்கும் வசதிகள், சுகாதாரம், வீட்டுத்திட்டங்கள், தொழில் வாய்ப்புகள் அனைத்தும் உள்ளடங்களாக திட்டம் ஒன்றினை கலந்தாலோசித்துள்ளதாகவும் அவ்வாறான திட்டங்களை கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாகவும் இப் பிரச்சினையை சுமுகமான நீதியான முறையிலே தீர்ப்பதற்காகத்தான் எதிர்பார்த்து உள்ளதாகவும் மேலும் கெளரவ அமைச்சர் தெரிவித்தார்.

News.lk•21 ஜூன், 2026
யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களுடனான கலந்துரையாடல் ..முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

கெளரவ நீதி அமைச்சர் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மீண்டும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது, தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவது நாட்டின் அபிவிருத்தி போன்ற நடவடிக்கைகள் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்குவது போன்ற அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதுதான் இன்றைய பரம்பரையின் பொறுப்பாக உள்ளது எனவும், அந்தப் பொறுப்பு மிகவும் கடினமானது எனவும் தெரிவித்தார்.

News.lk இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • இராமலிங்கம் சந்திரசேகர்
  • ஹர்ஷன நானாயக்கார
இடங்கள்
  • யாழ்ப்பாண மாவட்டத்தில்2
  • Northern Province
  • Eastern Province
திறவுச்சொற்கள்
  • காணாமல்2
  • குடும்பங்களுக்கு
  • உறவினர்களுடனான
  • அமைப்புக்கள்
  • செயற்பாடுகளை
  • கடற்றொழி்ல்
  • போனவர்களின்
  • மாவட்டத்தை
  • முன்னுரிமை
  • மேற்கொண்டு

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.

இதை வெளியிட்ட மற்றவை

இதுவரை ஒரு ஊடகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது

  • காணாமல் போனோர் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது-  கடற்றொழி்ல் அமைச்சர்News.lk·22 ஜூன், 2026
முழு செய்தித் தொகுப்பு