இலங்கை இளையோரை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக நேற்று (19) நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இந்திய அணி, தோல்வி அடையாத அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
