1 ஊடகம்
பெரகும்கம யுத்தவீரகள் வீட்டுத் திட்டத்தை பார்வையிட பாதுகாப்புப் பிரதி அமைச்சர் விஜயம்
பொலன்னறுவை மாவட்டத்தின் ஏலஹெர பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தியபெதும, பெரகும்கம யுத்தவீரர்கள் வீட்டுத் திட்டத்தில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், அங்குள்ள அடிப்படை வசதிகளை விரைவாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆராயவும், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கடந்த ஜூன் 26 ஆம் திகதி அங்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
