1 ஊடகம்
யாழ்ப்பாண மக்களின் நலனுக்காக அரச சேவைகள் விரிவாக்கம் – புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவை ஆரம்பம்
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகளை மாவட்ட மட்டத்தில் விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யும் சேவையின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டச் செயலக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் திரு. அ. கிருபாகரன் தலைமையில் இன்றைய தினம் (19.10.2026) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
