புதிய கடற்படைத் தளபதி அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, ஸ்ரீ தளதா மாளிகைக்குச் சென்று வழிபாடு செய்து ஆசி பெற்றார்
இலங்கை கடற்படையின் 27 வது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்ற பின்னர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ நேற்று (2026 ஜூலை 10) கண்டியில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா விஹாரை ஆகிய இரு தரப்பினதும் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றதுடன், மேலும் கண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தளதா மாளிகைக்குச் சென்று, ஸ்ரீ தளதா பெருமானை வழிபட்டு, கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைவதற்காக ஆசி பெற்றார். இந்நிகழ்வில் கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவ தலைவி திருமதி கௌசல்யா ஓபாத பெர்னாண்டோ அவர்களும் கலந்துகொண்டார்.