1 ஊடகம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நிலங்களை மக்களிடம் விரைவாக விடுவிப்பது குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!
கடந்த யுத்த காலத்தில் பாதுகாப்புப் படையினரால் பொறுப்பேற்கப்பட்டு, தற்போது விடுவிக்கப்படக்கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள காணிப்பகுதிகளை விரைவாக விடுவித்து, உரிய தரப்பினரிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
