விசேட அவசர கால பதிலளிப்பு பிரிவு ஸ்தாபிப்பு
வௌிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் விசேட அவசர கால பதிலளிப்பு பிரிவு நிறுவப்பட்டுள்ளது.வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் வழிகாட்டலின் கீழ் மத்திய கிழக்கு வலயத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.அவசர நிலைமைகளின் போது+94 117 445641 மற்றும் +94 112 207250 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அல்லது [email protected] எனும் மின்னஞ்சலின் ஊடாக தொடர்புகொள்ள முடியுமென வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கையர்கள் மற்றும் அவர்களது இலங்கையிலுள்ள உறவினர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதற்காக இந்த அவசர கால பதிலளிப்பு பிரிவு 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தப்பட்டுள்ளது.
