தீ விபத்தில் 02 சிறுவர்கள் உயிரிழப்பு
மட்டக்களப்பு நகரிலுள்ள ஹோட்டலொன்றின் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 02 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.பதுளை - பசறை பெல்கஹாதென்ன பகுதியை சேர்ந்த 05 வயதான சிறுமியும் 03 வயது சிறுவனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தனது மனைவியின் மருத்துவ தேவைக்காக பிள்ளைகளுடன் மட்டக்களப்பிற்கு வந்ததாக, உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.இந்த நிலையில் மனைவியை மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர், தந்தையும் பிள்ளைகளும் மட்டக்களப்பு நகரிலுள்ள ஹோட்டலொன்றில் தங்கியுள்ளனர்.இன்று(27) மாலை 02 பிள்ளைகளையும் அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு, தந்தை ஹோட்டலின் கீழ் தளத்திற்கு சென்றுள்ளார்.இதன்போது சிறுவர்களினால் அறைக்குள் இருந்த லைட்டர் இயக்கப்பட்டுள்ளதால் அறையின் கட்டில் தீப்பற்றியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இதனையடுத்து ஏற்பட்ட புகையை நுகர்ந்ததால் குறித்த 02 சிறுவர்களும் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் கூறினர்.சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
-556504.jpg)