கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க மதத் தலைவர்களுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களிடையே சகவாழ்வு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும், எந்தவிதமான இனவாத அல்லது மதரீதியான வெறுப்புணர்வையும் அனுமதிக்காமல் தேசிய ஒற்றுமையை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டம் குறித்து இச்சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மக்களின் வாழ்க்கை முறையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் மற்றும் அவற்றால் ஏற்படக்கூடிய அழிவுகளை தடுப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது. அனைத்து சமூகங்களுக்கிடையேயும் நம்பிக்கையை பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை கத்தோலிக்க மதத் தலைவர்கள் பாராட்டியதுடன், இந்த முயற்சிகளுக்கு தமது முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
News.lk இலிருந்து சுருக்கப்பட்டது
நபர்கள்- Anura Kumara Dissanayake2
- அருட்தந்தை2
- கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை
- அநுர குமார திசாநாயக்காவுக்கும்
- அநுர குமார திசாநாயக்கவிற்கும்
- ஜூலியன் பெற்றிக்
- சிறில் காமினி
- ரோஷன் கமகே
நிறுவனங்கள்- அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின்
- அரசியலமைப்பு சபை
- அலுவலகத்தில்
- செயலகத்தில்
திறவுச்சொற்கள்- தலைவர்களுக்கும்2
- கத்தோலிக்க2
- சந்திப்பு2
- மதத்2
- ஜனாதிபதிக்குமிடையே
- இச்சந்திப்பின்
- ஜனாதிபதிக்கும்
- அனுமதிக்காமல்
- சந்திப்பொன்று
- சமூகங்களிடையே
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு