1 ஊடகம்
நாட்டில் 96 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம்
2026 ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 96,040 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்த பிரிவு வௌியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில், கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 10,155 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
