இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
