அரசிற்கு உரம் வழங்கும் தனியார் உர நிறுவனங்கள்
- தனியார் உர நிறுவனங்களிடமுள்ள உரங்களில் 68 வீதமான உரங்களை அரசாங்கத்திற்கு வழங்க இணக்கம் வௌியிட்டுள்ளதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.உரத்திற்காக விவசாயிகளுக்கு 02 ஹெக்டேயர்களுக்கு 50,000 ரூபா வழங்கப்படும் எனவும் நெற்செய்கை காணிகளில் இடைப்போக பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 02 ஹெக்டேயர்களுக்கு 30,000 ரூபா வழங்கப்படும் எனவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.உரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன விவசாயிகளிடம் கோரியுள்ளார்.
-555009.jpg)