ஒரு ட்ரில்லியன் ரூபா வருமானம்
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வருமானம் ஒரு ட்ரில்லியன் ரூபாவை கடந்துள்ளது.இந்த வருடத்தின் மே 18 ஆம் திகதி ஒரு ட்ரில்லியன் ரூபா வருமான இலக்கை எட்ட முடிந்ததாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் பொதுச் சேவைகளை வலுப்படுத்துவதற்கு இது பெரும் பக்கபலமாக அமையும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை, தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின்படி 2026 ஏப்ரல் மாதத்தில் நாட்டின் முதன்மை பணவீக்கம் 4.7 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.தொகைமதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி 2026 மார்ச் மாதத்தில் இந்த மதிப்பு 2.4 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 1.1 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
 (5)-616631-556382.jpg)