உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்இப்போது

இயற்கை அனர்த்த நிலையில் முன்னாயத்த அவசரகால ஒத்திகை நிகழ்வு கண்டாவளைப் பிரதேசத்தில் முன்னெடுப்பது தொடர்பில் முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல்

​கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில், பாரிய அனர்த்தம் ஏற்பட்டால் பொதுமக்கள், திணைக்களங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் செயற்படும் விதம் தொடர்பான அனர்த்த முன்னாயத்த அவசரகால ஒத்திகை நிகழ்வுக்கான முன்னேற்பாட்டுக் கூட்டம் பரந்தன் பொதுநோக்கு மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ் தலைமையில் நடைபெற்றது. ​அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் வழிகாட்டலிலும் ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலின் பேரிலும், இயற்கை அனர்த்தங்களின் போது மக்களைப் பாதுகாப்பது தொடர்பான அவசரகால ஒத்திகை நிகழ்வுகள் நாடு தழுவிய ரீதியில் திட்டமிடப்பட்டுள்ளன. ​இதன் ஒரு அங்கமாக, கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வெள்ளப்பெருக்கின் போது கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட கண்டாவளைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பரந்தன், உமையாள்புரம் மற்றும் தட்டுவன்கொட்டி ஆகிய கிராமங்களை உள்ளடக்கி எதிர்வரும் செப்டம்பர் 30-ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு அவசரகால ஒத்திகை நிகழ்வொன்று நடாத்தப்படவுள்ளது. ​இக்கூட்டத்தில் உரையாற்றிய கண்டாவளைப் பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன், கடந்த காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது கண்டாவளைப் பிரதேசம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட போதிலும், இராணுவத்தினர், சுகாதாரத் துறையினர், கல்வித் துறையினர், மின்சார சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துத் திணைக்களங்களும் எவ்வித வேறுபாடுமின்றி ஒருங்கிணைந்து மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்ததாகக் குறிப்பிட்டார். ​குறிப்பாக A35 வீதியில் சுமார் 4 அடி உயரத்திற்கு நீர் ஊடறுத்துப் பாய்ந்தமையால் போக்குவரத்துத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு பெரும் சவால்கள் ஏற்பட்ட போதிலும், பாடசாலை அதிபர்களின் ஒத்துழைப்புடன் 13 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், எதிர்வரும் 30-ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த அவசரகால ஒத்திகை நிகழ்வில் அனைத்துத் திணைக்கள அதிகாரிகளும், பங்குதாரர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்கிப் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ​தொடர்ந்து தலைமையுரையாற்றிய கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ், அனர்த்தங்கள் ஏற்படும் போது மக்கள் எவ்வாறு விழிப்பாகவும் பாதுகாப்பாகவும் இயங்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை வழங்கவே ஜனாதிபதி செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவத் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பில் இந்த ஒத்திகை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ​கடந்த வெள்ளப் பெருக்கின் போது கிராம உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், தன்னார்வ இளைஞர் மன்றங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் 24 மணிநேரமும் தொடர்ச்சியாகச் சேவையாற்றி, வெள்ள நீரைக் கடந்து படகுகள் மூலம் மனிதர்களையும் விலங்குகளையும் மீட்டெடுத்த அர்ப்பணிப்பான சேவைகளைப் பாராட்டினார். ​அத்துடன், மீண்டும் ஒரு அனர்த்தக் காலத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், கடந்த காலத்தில் எதிர்கொள்ளப்பட்ட சவால்கள் மற்றும் கற்றுக் கொண்ட பாடங்களை அடிப்படையாகக் கொண்டு மாற்றுத் திட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் வரவுள்ள ஒத்திகை நிகழ்விலும் அடுத்து வரும் அனர்த்தக் காலங்களிலும் மாவட்டத்தின் அனைத்துத் திணைக்களங்களும், மக்கள் பிரதிநிதிகளும், அரச அதிகாரிகளும் இணைந்து மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

News.lk•இப்போது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • நளாயினி இன்பராஜ்
  • த. பிருந்தாகரன்
நிறுவனங்கள்
  • மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்
  • அனர்த்த முகாமைத்துவத் திணைக்களத்தின்
  • அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர்
  • வீதி அபிவிருத்தி அதிகார சபையின்
  • அனர்த்த முகாமைத்துவப் பிரிவின்
  • தன்னார்வ இளைஞர் மன்றங்கள்
  • மின்சார சபை
  • செயலகம்
இடங்கள்
  • பரந்தன் பொதுநோக்கு மண்டபத்தில்
  • கிளிநொச்சி மாவட்டத்தில்
  • கண்டாவளைப் பிரதேசம்
  • தட்டுவன்கொட்டி
  • உமையாள்புரம்
  • Kilinochchi
  • கண்டாவளைப்
  • பரந்தன்
திறவுச்சொற்கள்
  • முன்னேற்பாட்டுக்
  • முன்னெடுப்பது
  • பிரதேசத்தில்
  • முன்னாயத்த
  • அனைத்துத்
  • அவசரகால
  • ஒத்திகை
  • இயற்கை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.