சொஹரா புஹாரி தொடர்பான நீதிமன்றின் உத்தரவு
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சொஹரா புஹாரியின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்து முஸ்லிம் காங்கிரஸ் வௌியிட்ட கடிதத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று(13) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.கொழும்பு மாநகர சபையின் வரவு - செலவு திட்டத்திற்கு ஆதரவளித்தமைக்காக சொஹரா புஹாரியின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தது.தமது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யும் கடிதத்தை வலுவற்றதாக்குமாறு சொஹரா புஹாரி முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
