1 ஊடகம்
"கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையில் விளையாட்டு என்பது பிள்ளையின் வளர்ச்சியில் தவிர்க்க முடியாதோர் அங்கமாகும்" -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய-
திறமைகளுடன் உடலாரோக்கியமும் மன ஆரோக்கியமும் நிறைந்த எதிர்கால மாணவர் சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்பதால், புதிய கல்வி மறுசீரமைப்புகளில் விளையாட்டை ஒரு கூடுதல் செயல்பாடாகக் கருதாமல், பிள்ளையின் வளர்ச்சியிலும் தவிர்க்க முடியாதோர் அங்கமாகவே கருதுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
