வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் டிஜிட்டல் பரிமாற்றக் குழு முதன்முறையாகக் கூடியது
வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் டிஜிட்டல் பரிமாற்றக் குழு, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் முதன்முறையாகக் கூடியது. வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் துணைத் தூதரக (கொன்சியூலர்) பிரிவை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
