1 ஊடகம்
சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரணை
இலங்கையின் தெற்கு கடலில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 06 சந்தேகநபர்களும் 07 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.20 நாட்களுக்கு முன்னர் காலி மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்றிருந்த குழுவினரே நேற்று முன்தினம்(07) கைது செய்யப்பட்டனர்.சந்தேகநபர்கள் பயணித்த பலநாள் மீன்பிடி படகிலிருந்து 103 கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயின் மற்றும் கொக்கெய்ன் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
