உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்1 செப்., 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் எல் நினோ தாக்கத்தால் சுமார் 9,000 குடும்பங்களுக்கு பவுசர்கள் மூலம் குடிநீர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் குடிநீர் நெருக்கடி மற்றும் எல் நினோ தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள நீர்ப்பற்றாக்குறை தொடர்பில் ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று (01) விசேட விஜயத்தை மேற்கொண்டார். இதன்போது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமான கந்தசாமி பிரபு மற்றும், வீடமைப்பு, நிருமாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. எல் நினோ தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள நீர்ப்பற்றாக்குறை காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 9,000 குடும்பங்களுக்கு தற்போது பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது. இதேவேளை மாவட்டத்தில் நிலவும் குடிநீர் நெருக்கடி தொடர்பான நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மக்களின் அத்தியாவசிய தேவையான நீரை வழங்குவதற்கு தனியார் துறையின் பங்களிப்பை பெற்றுக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கியதுடன், மாவட்டத்திற்கு தேவையான நீரினை முந்தானையாறு திட்டம் மற்றும் மாதுரு ஓயா வலதுகரை வாய்க்கால் மூலம் வாகனேரி குளத்திற்கு நீர் வழங்கும் திட்டத்திற்கு எமது நாட்டு பணத்தில் மேற்கொள்வதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், நீர்வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நீர்ப்பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கான திட்டங்கள் தொடர்பிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் , பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், பொறியியலாளர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர், துறைசார் நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை உறுதிப்படுத்தும் வகையில், தற்போதைய நெருக்கடிக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதுடன், எதிர்காலத்திற்கான நிலையான நீர் வழங்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவர் நீர் வழங்களுக்கு தேவையான நிதியினை அவசர தேவை கருதி நீர் வழங்கல் அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ சேவையுடாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

News.lk•1 செப்., 2026
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

இதேவேளை மாவட்டத்தில் நிலவும் குடிநீர் நெருக்கடி தொடர்பான நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

News.lk இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • ஜே.எஸ். அருள்ராஜ்
  • கந்தசாமி பிரபு
  • சுசில் ரணசிங்க
நிறுவனங்கள்
  • பிரதேச ஒருங்கிணைப்புக்
  • நீர் வழங்கல் அமைச்சு
  • முகாமைத்துவ
இடங்கள்
  • மட்டக்களப்பு மாவட்டத்தின்
  • வாகனேரி குளத்திற்கு
  • Batticaloa
திறவுச்சொற்கள்
  • நீர்ப்பற்றாக்குறை
  • குடும்பங்களுக்கு
  • மாவட்டத்தில்
  • தாக்கத்தால்
  • பவுசர்கள்
  • குடிநீர்
  • மூலம்
  • நினோ
  • எல்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.