பிரபல பாடகர் காலமானார்
பிரபல பாடகர் பிரியங்கர பெரேரா காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) இரவு காலமானதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.

காலமான பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேராவின் இறுதிச்சடங்குகள் நாளை (03) நடைபெறும் என அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவரது பூதஉடல் இன்று (02) பிற்பகல் பொரளை பகுதியில் உள்ள தனியார் மலர்சாலைய ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. நீண்டகாலமாக நோயுற்றிருந்த பிரியங்கர பெரேரா, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) இரவு காலமானார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு