1 ஊடகம்
கல்முனை மாநகர பதில் ஆணையாளருக்கு அச்சுறுத்தல்: பொலிஸார் விசாரணை!
கடமைகளை உரிய முறையில் செய்யாத ஊழியரிடம் விளக்கம் கோரிய கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளரை, குறித்த ஊழியர் அச்சுறுத்திய சம்பவம் ஒன்று நேற்று (09) கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.