1 ஊடகம்
பாலின்தநுவர அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 17 வீடுகள் நிர்மாணிக்கும் பணி ஆரம்பம்: குறைந்த வருமானம் பெறுவோருக்கு 16 மில்லியன் ரூபா வீடமைப்பு உதவி
மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்களின் பின்னர், அவர்களுக்கு ஒரு நிலையான முகவரியைத் தற்போதைய அரசாங்கம் வழங்கும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மலையக மக்களுக்காக, பெலெந்த மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் மொஹமதீவத்த புதிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 17 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் நேற்று (03) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
