சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் கைதிகளின் அடர்த்தியைக் குறைப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்
சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் கைதிகளின் அடர்த்தியைக் குறைப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறித்த குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.
