2026 LPL தொடருக்கு நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட 20 நட்சத்திரங்கள்
கொழும்பு, இலங்கை (மே 29, 2026): இலங்கையின் மிகப்பிரமாண்ட டி20 கிரிக்கெட் திருவிழாவான 'லங்கா பிறீமியர் லீக் 2026' (6ஆவது அத்தியாயம்) தொடருக்கான ஆரம்பகட்டப் பணிகள் சூடுபிடித்துள்ளன. இதன்படி, எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ வீரர்கள் வரைவு (Player Draft) நிகழ்விற்கு முன்னதாகவே, முன்னணி உள்நாட்டு மற்றும் சர்வதேச நட்சத்திரங்கள் அடங்கிய நேரடி ஒப்பந்தப் பட்டியலை (Pre-signed Players) லங்கா பிறீமியர் லீக் தொடரின் நிர்வாகம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
