"எமது அரசின் அடிப்படைப் கொள்கையும் பொறுப்பும் அனைத்துப் பாடசாலைகளிலுமுள்ள பிள்ளைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதாகும்." — பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
அனைத்துப் பிள்ளைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதே அரசின் அடிப்படைப் கொள்கையும் பொறுப்பும் ஆகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2026.10.10 அன்று வடமத்திய மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட கல்வி தொடர்பான அவதானிப்பு விஜயத்தின் போது, கெகிராவ மத்திய மகா வித்தியாலயத்தின் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிட்ட போதே கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.
