2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நவம்பர் 12 முதல் டிசம்பர் 14 வரை – பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம்
வரவுசெலவுத் திட்டத்தின் முதலாம் மதிப்பீடு ஒக்டோபர் 07ஆம் திகதி வரவுசெலவுத் திட்ட உரை நவம்பர் 12ஆம் திகதி 2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு (வரவுசெலவுத் திட்ட உரை/வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்தல்) 2026 நவம்பர் 12ஆம் திகதி மேற்கொள்ளப்படுவதுடன், அதனைத் தொடர்ந்து நவம்பர் 13ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை விவாதத்தை நடத்துவதற்கும் அண்மையில் (25) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
