நம்பிக்கையுடன் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுங்கள். முதலீட்டாளர்களுக்கு சாதகமான மற்றும் பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கியுள்ளோம் - ஜனாதிபதி
ஜனாதிபதி தலைமையில் இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாடு - 2026 முதலீடுகளுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்காக வெளிப்படையான நிர்வாக முறையைப் பேணுதல், தேவையான சட்டங்கள் மற்றும் விதிகளைத் தயாரித்தல் மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் என்பவற்றுக்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், எனவே நம்பிக்கையுடன் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வருமாறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக சமூகத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார்.
