திருகோணமலையில் 48 பயனாளிகளுக்கு புதிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு, அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் "தமக்கென ஓர் இடம் - அழகான வாழ்க்கை" திட்டத்தின் கீழ் 5,000 வீடுகளை வழங்கும் வேலைத்திட்டம் இன்று (05) நடைமுறைப்படுத்தப்பட்டது.
