மனித-யானை சகவாழ்விற்கான விஞ்ஞான ரீதியான மற்றும் நடைமுறை அணுகுமுறை: வனஜீவராசிகள் கள உத்தியோகத்தர்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த மோட்டார் சைக்கிள்கள் வழங்கல்
இலங்கையில் மனித-யானை மோதல் வெறும் சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல; பல தசாப்தங்களாக இடம்பெற்ற திட்டமிடப்படாத நிலப்பயன்பாடு, யானை வழித்தடங்கள் அடைக்கப்படல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களால் உருவான ஒரு சிக்கலான சமூக-பொருளாதார நெருக்கடியாகும். இதுவரை காணப்பட்ட தற்காலிக தீர்வுகளுக்குப் பதிலாக, விஞ்ஞான அடிப்படையிலான நிலையான தீர்வுகளை அடைவதற்கான தேசிய தேவையை உணர்ந்து, தற்போது ஒரு விரிவான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
