1 source
சர்வதேச கடற்பரப்பில் விபத்திற்குள்ளான ஈரான் கப்பல்
சர்வதேச கடற்பரப்பில் விபத்திற்குள்ளான IRIS DENA எனும் ஈரான் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்த 30 பேர் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.கப்பல் விபத்திற்குள்ளான சந்தர்ப்பத்தில் அதில் 180 பேர் இருந்துள்ளனர்.குறித்த கப்பல் காலியை அண்மித்த சர்வதேச கடற்பரப்பு எல்லையில் விபத்திற்குள்ளாகியுள்ளதாக வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் இன்று(04) தெரிவித்தார்.
