ஆசிரியர்களுக்கு வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைகளுக்கான சலுகைகளை வழங்குதல்
இலக்கம் 2444/21 மற்றும் 2025.07.08 திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட திருத்தம் செய்யப்பட்ட ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரகாரம் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக, தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர் சேவை உத்தியோகத்தர்களுக்கு முன்னர் நடைமுறையில் இருந்த இதவடிவ (Module) நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வினைத்திறன்காண் தடைதாண்டல்களை நிறைவு செய்வதற்கு இனியும் வாய்ப்பில்லாத நிலைமையைக் கருத்திற்கொண்டு, அரச சேவை ஆணைக்குழுவினால் பின்வரும் சலுகைகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக 2026.09.07 திகதிய கடிதம் மூலம் இவ்வமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
