சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை - லிட்ரோ
மார்ச் மாதத்திற்கான சமையல் எரிவாயுவின் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த பெப்ரவரி மாதத்திலும் லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை.12 தசம் 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3690 ரூபாவாகவும் 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1482 ரூபாவாகவும் உள்ளது.2 தசம் 3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபா என லிட்ரோ நிறுனம் தெரிவித்துள்ளது.மார்ச் மாதத்திற்காக 38,000 மெற்றிக்தொன் எரிவாயு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் கூறுகின்றது.அதில், தற்போது வரை 7800 மெற்றிக் தொன் எரிவாயு நாட்டை அண்மித்துள்ளது.
