1 source
சர்வதேச மின்-கழிவு தினத்தை முன்னிட்டு முக்கிய பங்குதாரர்களின் பங்களிப்புடன் சுற்றாடல் அமைச்சில் விசேட வேலைத்திட்டம்
தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் துரிதமாக விரிவடைந்து வரும் டிஜிட்டல் மாற்றத்தின் பின்னணியில், மின்னியல் மற்றும் இலத்திரனியல் கழிவுகள் (e-waste) என்பவை வெறும் சாதாரண கழிவுகள் மட்டுமல்ல. முறையான முகாமைத்துவமின்றி சுற்றாடலில் விடப்பட்டால் அவை கடுமையான சுற்றாடல் மற்றும் சுகாதார அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதுடன், விஞ்ஞான ரீதியான மீள்சுழற்சி ஊடாக மீண்டும் பொருளாதாரப் பெறுமதியை உருவாக்கக்கூடிய பெறுமதிமிக்க வளங்களாகவும் திகழ்கின்றன.
