மகா உஸ்வெவ பராக்கிரம ஆரம்பப் பாடசாலையின் "சிசுநெண அபிமன்" நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர்
"கிராமப்புற குழந்தைகளுக்கு தேவையற்ற அழுத்தங்கள் இல்லாத கல்விச் சூழலை உருவாக்குவதே எமது இலக்காகும்" - மகா உஸ்வெவ பராக்கிரம ஆரம்பப் பாடசாலையின் "சிசுநெண அபிமன்" நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவிப்பு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் புத்தளம் மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், வடமேல் மாகாணத்தில் 4ஆம் இடத்தையும் பெற்றுச் சாதனை படைத்த மகா உஸ்வெவ பராக்கிரம ஆரம்பப் பாடசாலை மாணவர்களைப் பாராட்டும் "சிசுநெண அபிமன்" விழா, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தலைமையில், ஞானானந்த அறக்கட்டளையின் வழிகாட்டலில் இன்று (30) அப்பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
