போலியான SLS தரச்சான்று இலச்சினையுடன் சந்தைக்கு விநியோகிக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் 8,500 குடிநீர் போத்தல்கள் அவிசாவளையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை வசம்!
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் போட்டித்தன்மை மேம்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால், 2026 ஆகஸ்ட் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவிசாவளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, போலியான இலங்கை தரச்சான்று இலச்சினை (SLS Mark) பயன்படுத்தப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் 8,500 குடிநீர் போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
