1 source
06 வாகனங்களை மோதிய பஸ் : ஒருவர் உயிரிழப்பு
கண்டி - கொழும்பு பிரதான வீதியின் கேகாலை, மொலகொட பகுதியில் பஸ், 06 வாகனங்களுடன் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.தனியார் பஸ், எதிர்த்திசையில் பயணித்த லொறி, 02 வேன்கள், 02 முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய வாகனங்களுடன் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் கூறினர்.சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
-557043.jpg)